search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தையின் லைசென்ஸ் ரத்து"

    கொச்சி நகரின் மையப்பகுதியில் கூட்ட நெரிசலில் சிறுமியை மொபட் ஓட்ட வைத்த தந்தையின் ஓட்டுனர் உரிமத்தை ஆர்.டி.ஓ. அதிகாரி 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக அறிவித்து அவரது லைசென்சை பறித்துச்சென்றார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மட்டச்சேரியை சேர்ந்தவர் சிபி பிரான்சிஸ். இவர் நேற்று தனது மனைவி, ஒரு கைக்குழந்தை மற்றும் 4½ வயது மகளுடன் மொபட்டில் கொச்சிக்கு புறப்பட்டார்.

    கொச்சி நகரின் மையப்பகுதியில் கூட்ட நெரிசலில் சென்றபோது சிறுமி தான் மொபட் ஓட்டவேண்டும் என்று அடம் பிடித்தார். முன்னாள் அமர்ந்திருந்த சிறுமியிடம் மொபட்டை ஓட்டக்கொடுத்துவிட்டு சிபி பிரான்சிசும், அவரது மனைவி மற்றும் கைக்குழந்தையும் பயணம் செய்தனர்.

    மிகவும் ஆபத்தான பயணத்தை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது பின்னால் வந்த ஒரு வாலிபர் சிறுமி மொபட் ஓட்டுவதை செல்போனில் படம் பிடித்து அதனை ஆர்.டி.ஓ .சாஜி மாதவனுக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த காட்சியை பார்த்த ஆர்.டி.ஓ. கண்காணிப்பு கேமிரா உதவியுடன் சிபி பிரான்சிசை மடக்கிப்பிடித்தார். செல்போன் படத்தை காண்பித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் மகளிடம் மொபட்டை ஓட்டக்கொடுத்தது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து அவரது ஓட்டுனர் உரிமத்தை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக அறிவித்து அவரது லைசென்சை பறித்துச்சென்றார்.

    பெற்றோர், குழந்தையை அமரவைத்து சிறுமி ஓட்டிய ஆபத்தான இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #tamilnews
    ×